தமிழ்நாடு

tamil nadu

டெல்லி கஞ்சவாலா இளம்பெண் மரண வழக்கு - உள்ளுறுப்பு பரிசோதனை அறிக்கையை வைத்து போலீஸ் விசாரணை!

By

Published : Feb 3, 2023, 9:23 PM IST

டெல்லி கஞ்சவாலா இளம்பெண் மரண வழக்கில், இளம்பெண்ணின் உள்ளுறுப்புகள் பரிசோதனை அறிக்கையை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: டெல்லி கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு அதிகாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், அஞ்சலி(23) என்ற இளம்பெண் 12 கிலோ மீட்டர் காரில் சிக்கியபடி இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்டமாக காரில் சென்ற 5 இளைஞர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் தப்பிக்க உதவியதாக, மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதில் அங்குஷ் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 11 காவலர்கள், அலட்சியமாக செயல்பட்டதாகக்கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கஞ்சவாலா இளம்பெண் மரண வழக்கில், இளம்பெண்ணின் உள்ளுறுப்புகள் பரிசோதனை தொடர்பான விஸ்செரா அறிக்கையை போலீசார் பெற்றுள்ளனர். ரோகினியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கையை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Delhi case: கஞ்சவாலா பெண் மரண வழக்கு - 300 சிசிடிவிக்களை ஆய்வு செய்கிறது போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details