தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் மகா கூட்டணி முறிவு ஏன்? கனையா குமார் பதில்! - காங்கிரஸ்

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அமைந்திருந்த மகா கூட்டணி முறிவு குறித்து காங்கிரஸ் இளம் தலைவர் கனையா குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

Kanhaiya
Kanhaiya

By

Published : Oct 23, 2021, 9:56 AM IST

பாட்னா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்த கனையா குமார், பிகாரில் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர் தேஜஸ்வி யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோரை கிண்டல் செய்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தேஜஸ்வி யாதவ், சிராக் பஸ்வான் ஆகியோர் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் ஆகிய உறவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஏற்ற இறக்கத்தினால் அந்த உறவு பாதித்துவிட்டது” என்றார்.

அண்ணன்- தம்பி, மாமா மச்சான் பிரிவு

தொடர்ந்து அவர் பேசுகையில், “யார் பிரிந்தார்கள், யார் சேர்ந்திருக்கிறார்கள்? இதெல்லாம் அரசியல். தேர்தல் ஏற்றத் தாழ்வுகளினால் அண்ணன்கள் பிரிந்து செல்வதையும், மாமா, மருமகன்கள் பாதிக்கப்படுவதையும் பார்க்கலாம். இதற்கு நான் என்ன செய்வது?

நாம் மக்கள் பிரச்சினைகளில் தெளிவாக இருக்க வேண்டும். வாழ்வாதாரம், உணவு, துணி, வீடு, கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் சுயமரியாதையை அளிப்பதையே நான் கவனித்து வருகிறேன்” என்றார்.

பிகாரிகளின் சுயமரியாதை

இந்த இடைத்தேர்தலில் என்ன பிரச்சினையை எழுப்ப போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “2020 சட்டசபைத் தேர்தலில், நான் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்பட அனைத்து கூட்டணி கட்சிகளுக்காகவும் பரப்புரை செய்தேன்.

முன்பு எழுப்பப்பட்ட பிரச்சினைகள் இன்னும் முழுமையடையவில்லை. அது வேலைவாய்ப்பாகட்டும். , கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி, பிகாரிகளுக்கு சுயமரியாதை கிடைப்பது ஆகட்டும் எதுவும் தீர்த்து வைக்கப்படவில்லை” என்றார்.

பிகார் வளர்ச்சி பாதிப்பு..

தொடர்ந்து, வேலையின்மை, மோசமான சுகாதார அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசுகையில், “கடந்த பல தசாப்தங்களாக மாநிலத்தின் நிலைமை மாறவில்லை, இதை மாற்ற வேண்டும். இது எங்களின் முக்கியப் போராட்டம்.

அரசியல் அலட்சியங்களுக்கு எதிரான போராட்டம். ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம் உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கவில்லை. மக்கள் வேலைக்காக வீடு வீடாக அலைகிறார்கள். பிகாரில் வளர்ச்சி நின்று விட்டது" என்றார்.

மகா கூட்டணி முறிவு ஏன்?

எனினும், பிகாரில் மகா கூட்டணி ஏன் முறிந்தது என்பது தொடர்பாக கனையா குமார் நேரடியாக பதில் அளிக்கவில்லை. பிகார் மாநிலத்தில் அக்.30 ஆம் தேதி தாராபூர் மற்றும் குசேஷ்வர் அஸ்தான் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்தத் தொகுதியின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் மறைவையடுத்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

இதையும் படிங்க : காங்கிரஸை காப்பாற்றினால் நாட்டை காப்பாற்ற முடியும் - கனையா குமார்

ABOUT THE AUTHOR

...view details