டெல்லி:2025ஆம் ஆண்டு பிகார் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஓர் அங்கமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத்தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கன்னையா குமார் இன்று காங்கிரசில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார்.
டெல்லி பகத்சிங் பூங்காவில் உள்ள பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, மாலை மூன்று மணியளவில் காங்கிரசில் இணையும் கன்னையா குமார், அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இவருடன், குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் இணையவுள்ளனர்.