தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Manipur Video: இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்பி அதிர்ச்சி தகவல்! - இண்டர்நெட் சேவை

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநிலத்தில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டால், இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வெளிவரும் என்று எம்பி லோரா எஸ் ஃபோஜ் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூரில் இண்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டால், இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்.பி. அதிர்ச்சி தகவல்
மணிப்பூரில் இண்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டால், இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்.பி. அதிர்ச்சி தகவல்

By

Published : Jul 21, 2023, 6:35 AM IST

Updated : Jul 21, 2023, 7:23 AM IST

எம்பி டாக்டர் லோரா எஸ் ஃபோஜ்தான் அளித்த பிரத்யேக பேட்டி

டெல்லி:மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநிலத்தில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டால், இது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் வெளிவரும் என்று எம்.பி. லோரா எஸ் ஃபோஜ் தெரிவித்து உள்ளார். பெண், இந்த சம்பவம் நிகழ்ந்த காங்க்போக்பி தொகுதியின் எம்பி டாக்டர் லோரா எஸ் ஃபோஜ்தான் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, அளித்த பிரத்யேக பேட்டியில், எம்.பி. டாக்டர் ஃபோஜ் கூறி உள்ளதாவது,. வன்மூறைச் சம்பவங்களால் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில், ஏதோ, அந்த இரண்டு பெண்கள் மட்டும், இதுபோன்ற இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர் என்று நினைத்து விட வேண்டாம். இதுபோன்று பல்வேறு சம்பவங்கள், அங்கு அரங்கேறி உள்ளன.

இரண்டு பெண்கள், ஒரு சமூக மக்களால், நிர்வாணப்படுத்தப்பட்டி, பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு உள்ள இந்த கொடூர சம்பவம், மே மாதம் 4ஆம் தேதி, மாலை 5 மணிக்கு அரங்கேறி உள்ளது. எனது தொகுதியான காங்போக்பி தொகுதியில், தான் அந்த இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, நிர்வாணமாக, பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சோக சம்பவம் நடைபெற்று உள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல், பொதுவெளியில் நடமாடி வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோரை, கண்காணித்து தண்டனை வழங்கும், சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த கும்பல், செல்லும் பகுதிகளில், காவல்துறையினர் ரோந்து செல்வதைக் கூட காண முடியவில்லை.

"இந்த நிகழ்வு, சமூகங்களைப் பற்றியது அல்ல. பெண்ணின் கண்ணியம் பற்றியது தான் ஆகும். . பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு உள்ளனர், அவர்கள் நிர்வாணப்படுத்த்பப்ட்டு, பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். புனிதமான இந்த உடல்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட நிகழ்வு, மிகவும் துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது ஆகும். பாதிக்கப்பட்ட பெண்கள் சார்ந்த சமூக பெண்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று நினைத்தாலே, நெஞ்சம் பதைபதைக்கிறது. பாதிப்புக்கு உள்ளானகு சமூகம் மட்டுமல்ல, பாதிப்புக்கு காரணமான மெய்டிஸ் சமூக பெண்களும், இந்த வலி அல்லது துன்பங்களை உணர்கிறார்கள்" என்று நாகா மக்கள் முன்னணி (NPF) எம்.பி. லோரா எஸ் ஃபோஜ் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களால், அங்கு அசாதாரண சூழல் நிலவ ஆரம்பித்து, எண்பது நாட்களுக்கு மேல் ஆகியும், இங்கு நிலைமை இன்னும் கொந்தளிப்பாக உள்ளது. "அரசாங்கம் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்கள், இங்கு முகாமிட்டு, நிலைமையினை ஆய்வு செய்தார். ஆனால், அவர் (அமித் ஷா), மணிப்பூரில் 20 முதல் 25 நாட்கள் தங்கியிருந்தாலும், நிலைமையை மதிப்பிடுவது போதுமானதாக இருக்காது என்று, எம்பி டாக்டர் லோரா எஸ் ஃபோஜ் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!

Last Updated : Jul 21, 2023, 7:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details