வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல பாடகர் ரிஹான்னா, மாடல் மியா கலிபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்பட பலர் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கிரிக்கெட்டர்கள், பாலிவுட் நடிகர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டனர். இதனால் சர்வதேச அளவில் தலைநகர் டெல்லியில் நடக்கும் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது ட்வீட்டில், "ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பாதிக்கிறது. ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையை பாதிக்கிறது. ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை பாதிக்கிறது என்று நினைத்தால், நீங்கள் தான் உங்களின் மதிப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களாக மாறக்கூடாது எனப் பதிவிட்டிருந்தார்.