டெல்லி:உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் (89), வயது மூப்பு மற்றும் பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதியுற்றுவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 4ஆம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(ஆகஸ்ட் 21) அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க:கல்யாண் சிங் பாஜகவிலிருந்து பிரிந்தபோது என்ன நடந்தது?
இந்நிலையில், அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த இரங்கல் ட்வீட்டில், "கால்யாண் சிங்...அரசியல்வாதி, மூத்த நிர்வாகி, அடிமட்ட தலைவர், சிறந்த மனிதர். உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஒரு மறக்க முடியாத பங்களிப்பை செய்துள்ளார்.