தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து மத துறவி கைது: 'மாநிலங்களுக்கு இடையேயான நெறிமுறைகள் மீறல்' - சர்ச்சைக்குள்ளான காளிச்சரணின் கைது

மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்துகளைக் கூறியதாக இந்து மத துறவி காளிசரண் மகராஜ் இன்று (டிசம்பர் 30) கைதுசெய்யப்பட்டார். இந்தக் கைது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தக் கைது நடவடிக்கை மாநிலங்களுக்கிடையேயான நெறிமுறைகள் மீறப்பட்டதாக மத்தியப் பிரதேச உள் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

kalicharan maharaj arrested  kalicharan maharaj arrested from chhatarpur  khajuraho hotel in madhya pradesh  dharma sansad in raipur  Derogatory remarks against Mahatma Gandhi  சர்ச்சைக்குள்ளான காளிச்சரணின் கைது  காளிசரண் மகராஜ் கைது செய்யப்பட்டதில் கூட்டாட்சிக் கொள்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை
சர்ச்சைக்கு உள்ளான இந்து மத துறவி காளிச்சரண் கைது

By

Published : Dec 30, 2021, 6:30 PM IST

Updated : Dec 30, 2021, 7:05 PM IST

சத்ராபூர் (மத்தியப் பிரதேசம்):மத்தியப் பிரதேச மாநிலம் பாகேஷ்வர் அருகே வாடகை வீட்டிலிருந்த காளிசரண் மகராஜை இன்று அதிகாலை சத்தீஸ்கர் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில ராய்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் கூறுகையில், காளிசரண் சத்தர்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், மாலைக்குள் அவர் ராய்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறியிருந்தார்.

கோட்சேவிற்குப் புகழாரம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராய்பூரில் தர்மசந்த் என்ற சமயக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதி நாளில் காளிசரண் 1947இல் நடந்த நிகழ்வுகளைக் கொச்சைப்படுத்தும்விதமாகப் பேசியதாகவும், காந்தியை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குப் பாராட்டுத் தெரிவித்ததாகவும், கோட்சேவின் செயலுக்குத் தலை வணங்குவதாக அவர் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் 'ஆச்சாரமான இந்துக்கள்'போல் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

காளிசரண் கைது

காளிசரணின் கைதை தொடர்ந்து மத்தியப் பிரதேச உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "காளிசரண் மகராஜ் கைதுசெய்யப்பட்டதில், கூட்டாட்சிக் கொள்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மேலும் சத்தீஸ்கர் எம்பி காவல் துறைக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். இதைத் தவிர, மாநிலங்களுக்கு இடையேயான நெறிமுறைகளும் மீறப்பட்டன" எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பேசுகையில், “காளிசரணை கைது செய்யும்போது எந்தவித வன்முறையும் கையாளப்படவில்லை. மேலும் கைது குறித்து காளிசரணின் நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார். இதனையடுத்து இரு மாநிலங்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கும்மியடிக்குது கரோனாவும் ஒமைக்ரானும்: இதுல சன்னி லியோனின் குத்தாட்டம் வேறயா?

Last Updated : Dec 30, 2021, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details