சத்ராபூர் (மத்திய பிரதேசம்):"மத்தியப் பிரதேச மாநிலம் பாகேஷ்வர் அருகே வாடகை வீட்டில் இருந்து காளிசரண் மகாராஜை இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ராய்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் கூறுகையில், காளிசரண் சத்தர்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்றும், மாலைக்குள் அவர் ராய்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறினார்.
கோட்சேவிற்கு புகழாராம்
கடந்த ஞாயிற்று கிழமை ராய்பூரில் தர்ம சந்த் என்ற மதக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதி நாளில் பேசிய காளிச்சரண் 1947 இல் நடந்த நிகழ்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாகவும், காந்தியை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும், கோட்சே செயலுக்கு தலை வண்ங்குவதாகவும் அவர் பேசியுள்ளார்.
இந்த நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் "ஆச்சாரமான இந்துக்கள்" போல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து தர்ம சந்த் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மகந்த் ராம்சுந்தர் தாஸ், காளிச்சரணின் கருத்துக்களை தான் புறக்கணிப்பதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை எனவும் அவர் கூறினார். சத்தீஸ்கரில் உள்ள திக்ராபாரா காவல் நிலையத்தில் காளிச்சரணுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:RECAP 2021: 21 முக்கிய தேசிய நிகழ்வுகள் - ஒரு மீள்பார்வை