எர்ணாகுளம் (கேரளா): எர்ணாகுளம் மாவட்டம், களமச்சேரி பகுதியிலுள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று (அக். 29) காலை நடைபெற்ற மதவழிப்பாட்டு பொது நிகழ்ச்சியில் போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 36க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன் இடம் கேட்டு அறிந்துள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு என்.எஸ்.ஐி (NSG) மற்றும் என்.ஐ.ஏ (NIA) சென்று விசாரணையை உடனடியாக தொடங்கும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், குண்டு வெடிப்பு நடைபெற்ற இடம் சீலிடப்பட்டு தற்போது என்.ஐ.ஏ விசாரணை மேற்கொள்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "களமச்சேரியிலுள்ள மாநாட்டு மையத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற மதவழிப்பாட்டு பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கேரளா சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் கேரளா மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், எர்ணாகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள, அனைத்து மருத்துவமனைகளையும் தயார் செய்யவும், விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளா தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறையினர் மற்றும் என்ஐஏ குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அதில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது மதவழிப்பாட்டு பொதுக் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு நீல நிற கார் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு அந்த கார் அப்பகுதியில் இருந்து வெளியே சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்த நீல நிற காரில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் மதவழிப்பாட்டு பொதுக் கூட்டத்திற்கு வந்திருக்கலாம் என சந்தேகத்தின் படி விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த நீல நிற கார் குறித்து விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை. இந்த கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஒருவர் பையுடன் சுற்றித் திரிந்ததாக சிலர் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:Kerala Bomb Blast : மருத்துவமனைகள் உஷார் நிலை.. விடுமுறை பணியாளர்கள் உடனடி பணிக்கு திரும்ப அமைச்சர் உத்தரவு!