தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் வெளிநாட்டவர் அதிகம் வாழும் ஆரோவில்லை அடுத்த குயிலாப்பாளையம் மந்தைவெளி திடலில், காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், மாடுகளின் கொம்புகளை சீவி, அழகிய வண்ணங்களை தீட்டி, அலங்கரித்து, மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ள வைத்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகள் சீறி பாய்ந்தபோது, அவர்களது நிலத்தில் விளைந்த மா, புளி, வாழை போன்றவற்றை வீசியெறிந்து மகிழ்ந்தனர்.
மேலும் ஆரோவில் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள், தமிழக பாரம்பரிய உடையான புடவை, தாவணி அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள் கரும்பு, பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர்.