உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் கோவிட்-19 பரவல் தொடர்பான பொதுநல வழக்கை நீதிபதிகள் சந்திர சூட், நாகேஷ்வர ராவ், ரவீந்திர பட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. கடைசியாக மே9ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், 10ஆம் தேதி அன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வழக்கு விசாரணை மே 13 (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.