தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடும்ப பிரச்சனையால் நீதிமன்றத்தை அணுகிய தம்பதியை சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்த நீதிபதி - தம்பதியை சுற்றுலாக்கு அனுப்பி வைத்த நீதிபதி

கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த ஓர் சுவாரஷ்ய தீர்ப்பு வழக்கறிஞர் மற்றும் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

குடும்ப முறிவினால்  நீதிமன்றத்தை அணுகிய தம்பதியினரை சுற்றுலாக்கு அனுப்பி வைத்த நீதிபதி
குடும்ப முறிவினால் நீதிமன்றத்தை அணுகிய தம்பதியினரை சுற்றுலாக்கு அனுப்பி வைத்த நீதிபதி

By

Published : Aug 12, 2022, 10:14 PM IST

ஜல்பைகுறி (கல்கத்தா) :குடும்ப உறவில் பிரச்சனை என வந்தத் தம்பதியை நீதிபதி சுற்றுலாவுக்கு டிக்கெட் போட்டு அனுப்பி வைத்த சம்பவம் மக்களிடையே சுவாரஷ்ய சம்பவமாகப் பேசப்பட்டு வருகிறது. கல்கத்தா உயர் நீதிமன்றம் நீதிபதி அபிஜித் கங்குலி கடந்த புதன்கிழமை (ஆக 10) குடும்பத் தகராறால் நீதிமன்றத்தை அணுகிய தம்பதியினருக்கு புரிக்கு செல்லும் படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உடனே டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இருந்தமையால் அவர்களுக்கு விஐபி கோட்டாவில் டிக்கெட் எடுத்துத் தந்து, அவர்கள் தங்குவதற்கு வசதியான விடுதியையும் ஏற்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, நாளை (ஆக 13) இந்தத் தம்பதியினர் புரிக்குச் செல்ல உள்ளனர். நீதிபதியின் உத்தரவு படி, சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு ஆக 17 அன்று கல்கத்தா திரும்புவார்கள் எனத் தெரிகிறது. மேலும், நிறைவடையாத இந்த வழக்கு செப் 2 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் இத்தகைய தீர்ப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details