உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்தயநாத் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
ஹைதராபாத் தொகுதி எம்.பியான அதாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உ.பி. தேர்தலில் தனித்து களம் கண்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், தேர்தலில் வெறும் 0.43 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று ஒவைசியின் கட்சி படுதோல்வி கண்டது. குறிப்பாக இக்கட்சியால் எந்தவொரு தொகுதியிலும் ஐந்தாயிரம் ஓட்டுக்களைக் கூட தாண்ட இயலவில்லை.