கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியாவில் கோயில்கள் உள்பட வழிபாடுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் அதிக பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடிய திருமலை கோயிலில் பக்தர்கள் வழிப்பாட்டிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏழுமலையானை தரிசிக்க நாளை முன்பதிவு தொடக்கம்! - திருப்பதி சிறப்பு தரிசனம்
அமராவதி: திருப்பதி கோயிலில் ஜூன் மாத சிறப்பு தரிசனத்திற்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
Srivari special darshan tickets
இந்நிலையில், ஜூன் மாதத்தில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய நாளை (மே.21) காலை 9 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது. இந்தச் சிறப்பு தரிசனத்திற்கு ஒரு நாளுக்கு ஐந்தாயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.