தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - today news

ஜூன் 5, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

news today
இன்றைய நிகழ்வுகள்

By

Published : Jun 5, 2021, 6:39 AM IST

Updated : Jun 5, 2021, 7:29 AM IST

+2 தேர்வு: சட்டப்பேரவை கட்சிப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்துசெய்வதா என்பது குறித்து முடிவு எடுக்க தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று காணொலி மூலம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார்.

அன்பில் மகேஷ் ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? இன்று வரவிருக்கும் புதிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மறுநாள் (ஜூன் 7) காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

மு.க ஸ்டாலின்

வட உள் மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

மழை

தடுப்பூசி தட்டுப்பாடு: கோவை, திருச்சியில் முகாம் ரத்து

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சி, கோவையில் இன்று நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் வந்த பின்னர் மீண்டும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு

கேரளாவில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கேரளாவில் கரோனா தொற்று பாதிப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில், இன்று முதல் 9ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இந்நாள்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்
Last Updated : Jun 5, 2021, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details