மேஷம்: நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதை போன்று உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்காலப் பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால், நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக் கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்: சிறிது கடினமான பிரச்னைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. சிறந்த வெற்றியடைவீர்கள்.
மிதுனம்: கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக மனதில் தோன்றும். அதனால் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்: வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தோட்ட வேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு சிறந்த நாளாகும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், காதல் உறவிற்காக நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்: பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக் கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.
கன்னி: குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும், உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொறுத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நிம்மதியாக நேரத்தைக் கழிப்பீர்கள். கோயிலுக்குச் செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
துலாம்: குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தைச் செலவழிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து சந்தோஷமாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
விருச்சிகம்: சிறிது மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதன் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள உங்கள் காதல் உறவுடன் காபி அருந்துவதற்காக நேரம் செலவழிக்கக் கூடும்.
தனுசு: சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை. உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக ஆக்கவும். தேவைப்பட்டால் மனம் திறந்து பேசுவோம். தேவையில்லாத நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம்.
மகரம்: உங்களது வெற்றி ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். இதன் மூலம் எந்த வித கடினமான நிலைமையையும் சமாளிக்கும் திறனைப் பெறுவீர்கள். வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. எனினும், உங்கள் சாதனைக்கு கடின உழைப்பு முக்கியமான காரணமாக இருந்து வந்துள்ளது. நண்பர்கள் உங்கள் செயல்திறனையும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையையும் பாராட்டுவார்கள்.
கும்பம்: உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நடுநிலையுடன் செயல்படுவீர்கள். உங்களது பணியில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆனால், சில விஷயங்கள் குறித்த எண்ணம் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
மீனம்:நிதி நிலைமையைப் பொறுத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பண வரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.