இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில கரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனையை மேற்கொண்டேன். சோதனையின் முடிவில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்புகொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மட்டும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா!