ஸ்ரீநகர்: காஷ்மீர் பத்திரிகையாளர்களுக்கு லஷ்கர் இ தொய்பா மற்றும் அதன் துணை அமைப்பான டி.ஆர்.எப். எனப்படும் தி ரெஸ்சிஸ்டென்ஸ் பிரண்ட் அமைப்பு மிரட்டல் விடுத்தது. ஆன்லைன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் 5 பத்திரிக்கையாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக காஷ்மீரின் 10 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம், உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்ததாக காஷ்மீர் போலீசார் ட்விட்டரில் தெரிவித்து உள்ளனர்.