உத்தரகாண்ட்:நைனிடால் நகருக்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது குறித்தும் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் நைனிடாலில் நிலச்சரிவுகள் குறித்து மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது நைனிடால் லோயர் மால் சாலையில் கடந்த பல வருடங்களாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை முக்கியப் பிரச்னையாக எடுத்துரைத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டார். மேலும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை நிரந்தரமாக சரி செய்வது தொடர்பான செயல் திட்டத்தை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டைக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வரும் விரிசல்களை சரி செய்வது குறித்தும் பேசினார். நிலச்சரிவு பாதித்த ஜோஷிமத் பகுதியில் மத்திய அரசு ஆய்வு நடத்தி வருவதாகவும், அந்த ஆய்வு நிலச்சரிவு காரணங்களை ஊகிக்க உதவும் என்றும், விஞ்ஞானிகளின் முந்தைய ஆய்வு மற்றும் புதிய ஆய்வின் அடிப்படையில் இப்பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பட் கூறினார்.