தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் டிவி நடிகை சுட்டுக்கொலை! - ஜம்மு காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் டிவி நடிகை சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்- பெண் ஒருவர் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்- பெண் ஒருவர் சுட்டுக்கொலை!

By

Published : May 26, 2022, 7:15 AM IST

Updated : May 26, 2022, 12:44 PM IST

புத்தகாம் (ஜம்மூ-காஷ்மீர்): ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் புத்தகாம் மாவட்டத்தில் உள்ள சதுரா பகுதியில் நேற்று(மே 25) மூன்று தீவிரவாதிகளால் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் அவருடன் இருந்த 10 வயது உறவுக்கார சிறுவன் ஒருவனும் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இது தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தாக்குதலில் உயிரிழந்த பெண் அம்ரீன் பட், அங்குள்ள தொலைகாட்சிகளில் நடித்து வந்துள்ளார். நேற்று காலை அம்ரீன் பட்டின் வீட்டில் அவரது உறவுக்கார குழந்தையுடன் இருக்கும் போது எதிர்பாராத விதமாக மூன்று தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து சுட ஆரம்பித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் டிவி நடிகை சுட்டுக்கொலை!

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார் அம்ரீனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அம்ரீன் ஏற்கனவே இறந்ததை உறுதிப்படுத்தினர்.

இதையும் படிங்க:காஷ்மீரில் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Last Updated : May 26, 2022, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details