ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிகழந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் பதிலளித்துள்ளார்.
மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதன்படி, 2017ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி வரை 348 பாதுகாப்பு வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு 80 வீரர்களும், 2018ஆம் ஆண்டு 91 வீரர்களும், 2019ஆம் ஆண்டு 80 வீரர்களும், 2020ஆம் ஆண்டு 62 வீரர்களும், இந்தாண்டு 35 வீரர்களும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் இந்த காலகட்டத்தில் 1,574 பொதுமக்கள் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத, நக்சல் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாத்து, வீரர்களை பலத்துடன் செயலாற்ற அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஐந்தாண்டுகளில் குடியுரிமையை துறந்த ஆறு லட்சம் இந்தியர்கள்