தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைப் பேச்சு

மது என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வியாதியைப் போக்க, மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஜான்குமார் பேசிய ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ
பாஜக எம்.எல்.ஏ

By

Published : Jun 8, 2021, 11:38 PM IST

புதுச்சேரி:கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியமான சில தேவைகளுக்கான சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார் வெளியிட்ட ஆடியோ ஜூன் 7ஆம் தேதியன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

அதில் ஜான்குமார், அன்பார்ந்த புதுச்சேரி மக்களே என ஆரம்பித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

வைரல் ஆடியோ

"என்னுடைய தொகுதியில் மது கிடைக்காமல் மது போதைக்காக சானிட்டைசரை குடித்து ஒருவர் உயிரிழந்துவிட்டார். இது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. எனவே இது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் புகார் தெரிவித்தேன். குடிப்பழக்கம் மனநோயாகிவிட்டது; ஒரு வியாதிக்கு மருந்து கொடுப்பதாகக் கருதி மதுக்கடையைத் திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். துணைநிலை ஆளுநரும் திறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்" என அந்த ஆடியோவில் ஜான்குமார் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எப்போது? சீமான் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details