தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கணவரின் சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம் நடத்திய பெண் - மனநலன் குன்றிய பெண் மீட்பு!

கட்டிய கணவரின் சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம் நடத்தி வந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 11, 2023, 10:35 AM IST

ஜம்ஷெட்பூர்:ஜார்கண்ட் மாநிலத்தில் கணவரை கொன்று சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம் நடத்திய பெண்ணை போலீசார் மீட்டனர். தொழில் நகரமான ஜம்ஷெட்பூரில் உள்ள மேங்கோ நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் சிங். மனைவி மீராவுடன் மேங்கோ நகரில் உள்ள சுபாஷ் காலனி பகுதியில் வசித்து வந்து உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அமர்நாத் சிங்கின் மகன் மகாரஷ்டிரா மாநிலம் புனே வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த நான்கு ஐந்து நாட்களாக அமர்நாத் சிங்கை பொது வெளியில் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அமர்நாத் சிங் வீட்டிற்கு சென்று விசாரித்த அக்கம் பக்கத்து வீட்டாரை அவரது மனைவி மீரா பல்வேறு காரணங்களை கூறி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அண்டை வீட்டார் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கினறனர் என வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் மீரா மின்சாரம் பாய்ச்சியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து அழுகிய துர்நாற்றம் வீசியதை தாங்கிக் கொள்ள முடியாத அக்கம் பக்கத்து வீட்டார், இது தொடர்பாக புனேவில் வசித்து வரும் அமர்நாத் சிங்கின் மகனுக்கு தகவல் அளித்து உள்ளனர். மேலும், போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு, அமர்நாத் சிங்கின் வீட்டின் தடுப்புச் சுவற்றில் பாய்ச்சப்பட்ட மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

தொடர்ந்து வீட்டை உடைத்துக் கொண்டு சென்றவர்களுக்கு கை மேல் அதிர்ச்சியாக அமர்நாத் சிங்கின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்து உள்ளது. பாதி எரிந்து கிடந்த அமர்நாத் சிங்கின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார் அங்கிருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எரிந்த நிலையில் கிடந்த அமர்நாத் சிங்கின் சடலத்தை மீட்டு அருகே உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அயர்ந்த நிலையில் இருந்த அமர்நாத் சிங்கின் மனைவி மீராவையும் போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், மீரா சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. அடிக்கடி கணவருடன் சண்டையிடுவதும் வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களை தூக்கி எறிந்து ஆக்ரோஷம் அடைவதையும் வழக்கமாக கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 நாட்களாக அமர்நாத் சிங்கின் நடமாட்டம் பொது வெளியில் காணப்படாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகித்த நிலையில் உண்மை வெளி வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மிட்டாய் தருவதாக 4 வயது சிறுமி இருமுறை பாலியல் வன்கொடுமை - 16 வயது சிறுவன் கொடூரச் செயல்!

ABOUT THE AUTHOR

...view details