ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் செல்லாரி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது கொதிக்கும் அரிசி உலையில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சிறுமிகள் இருவரும் சகோதரிகள் என்பதும் செல்லாரியில் வசிக்கும் பரமேஷ்வர் என்பவரது மகள்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 6) நடந்தது.
பள்ளியில் நடந்த சோகம்.. அரிசி உலையில் விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு.. - ஜார்கண்ட் நடுநிலைப் பள்ளி விபத்து
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது அரிசி உலையில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் விழுந்த உடன் பள்ளி ஆசிரியர்கள் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக ராஞ்சியில் மருத்துவமனைக்கு சிறுமிகள் மாற்றப்பட்டனர். இதையடுத்து மாலையில் இளைய சகோதரி குமாரி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அதன்பின் மூத்த சகோதரி ஷிபு இன்று (டிசம்பர் 7) காலை உயிரிழந்தார். இவர்களின் சிகிச்சைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனிடையே பள்ளியின் உணவு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தலைமையாசிரியர் உமாதேவியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:எரிபொருள் கசிவு காரணமாக ஃப்ளைபிக் விமானம் ரத்து... பயணிகள் அவதி...