தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்ட்டில் திருமணமான பெண் கொலை.. ஆண் நண்பர் தலைமறைவு.. - etv bharat tamil

ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணமான பெண்ணை கொலை செய்த அவரது ஆண் நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஜார்கண்டில் திருமணமான பெண்ணை கொலை செய்த ஆண் நண்பர்!
ஜார்கண்டில் திருமணமான பெண்ணை கொலை செய்த ஆண் நண்பர்!

By

Published : Jan 16, 2023, 10:04 AM IST

டேராடூன்:ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் அவரது ஆண் நண்பரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஜனவரி 15) நடந்துள்ளது. முதல்கட்ட தகவலில், டெல்லியை சேர்ந்த திருமணமான மம்தா தேவி என்பவருக்கும் அர்மான் கான் என்பவருக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது.

இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தால், அர்மான் கானுடன் உடன் பேசுவதை தேவி தவிர்த்துள்ளார். இருப்பினும், அர்மான் கான் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததால், டெல்லியில் இருக்கும் சகோதரி ஜெயா வீட்டிற்கு ஜனவரி 14ஆம் தேதி தேவி சென்றார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 15) ஜெயாவும் அவரது கணவர் நிகில் குஷ்வாஹாவும் தேவியை வீட்டிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு மார்க்கெட் சென்றுள்ளனர். இதையடுத்து வீடு திரும்பியபோது தேவி ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஜெயா போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், அர்மான் கான் தனது சகோதரிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தார். என்னை செல்போனில் அழைத்து தேவியை டெல்லிக்கு அனுப்புமாறு வற்புறுத்தினார். மறுத்ததற்கு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இப்போது தேவியை கொலை செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அர்மான் கான் தலைமறைவாகியுள்ளார்.

இதையும் படிங்க: பிளாட்பாரத்தில் தூங்கிய நபரை கட்டையால் தாக்கி கொலை செய்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details