ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் உள்ள கர்வா பகுதியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவரின் உடலை ராம்கர் காவல் துறையினர் நேற்று முன்தினம் (ஆக. 24) மீட்டனர். அந்த பெண், கர்வா பகுதியைச் சேர்ந்த கிரண் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, ராம்கர் காவல் நிலையத்தில், நேற்று (ஆக. 25) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரகாவல் துறை அதிகாரி சுதர்சன் ஆஸ்திக் கூறுகையில்,"கிரணுக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது. ஆனால், அவர் மகேஷ் என்ற தனது காதலுடன் திருமணத்தை மீறிய உறவிலும் இருந்து வந்துள்ளார். கடந்த ஆக. 16 அன்று இரவு, காதலன் மகேஷ் கிரணை பார்க்க அக்கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அதை கிராமத்தினர் சிலர் பார்த்து, அவர்களை துரத்தியுள்ளனர். அதில், தப்பித்த மகேஷ், மறுநாள் (ஆக. 17) கிரண் வீட்டருகே விட்டுச்சென்ற தனது பைக்கை எடுக்க திரும்பி வந்தபோது, கிராமத்தினர் அவரை பிடித்துள்ளனர். தொடர்ந்து, கிரண், மகேஷ் ஆகியரை இருவரையும் கட்டிவைத்து, கிராமத்தினர் சிலர் தாக்கியுள்ளனர். மேலும், கிரணை மனைவியாக ஏற்க மறுத்த கணவர், அவரை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கூறியுள்ளார்.
இதனால், ஆக. 19ஆம் தேதியில் இருந்து, மகேஷின் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால், கிரண், மகேஷ் ஆகியோர் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மகேஷின் பெற்றோர் இருவரின் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், மனமுடைந்த கிரண் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்" என்றார்.
இதையும் படிங்க:தாய், மகள் மாயம்....பேயோட்டுபவர் மீது மகன் சந்தேகம்