தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாலுவின் பிணை மனுவை நிராகரித்த ஜார்காண்ட் உயர் நீதிமன்றம்! - ஜார்காண்ட் உயர் நீதிமன்றம்

லாலு பிரசாத்
லாலு பிரசாத்

By

Published : Feb 19, 2021, 6:46 PM IST

Updated : Feb 19, 2021, 7:06 PM IST

17:56 February 19

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தாக்கல் செய்த பிணை மனுவை ஜார்காண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத், பிகார் முதலமைச்சராக பொறுப்பு வகித்தபோது, மாட்டுக்கு தீவனம் வாங்குவதில் ஊழலில் ஈடுப்பட்டதாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அரசின் கருவூலத்திலிருந்து 3.13 கோடி ரூபாயை கையாடல் செய்ததாக அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் குற்றம் செய்ததாக நிருபிக்கப்பட்டது.  

இந்நிலையில், பிணைக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஜார்காண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து நீதிபதி அபரேஷ் குமார் சிங் கூறுகையில், "அவருக்கு விதிக்கப்பட்ட மொத்த தண்டனை காலத்தில் 50 விழுக்காட்டை நிறைவேற்ற இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. எனவே, இரண்டு மாதங்களுக்கு பிறகு மற்றொரு பிணை மனுவை அவர் தாக்கல் செய்யலாம்" என்றார்.

மாட்டு தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் மூன்று வழக்குகளில் அவருக்கு பிணை கிடைத்துள்ளது. தற்போது, நுரையீரல் பிரச்னை காரணமாக அவர் டெல்லி ஏய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். முன்னதாக, ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் உடல்நிலை மோசமடைந்ததது.  

கடந்த 2017 டிசம்பர் மாதத்திலிருந்து, லாலு சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துவருகிறார். பெரும்பாலான தண்டனை காலத்தை ஜார்காண்ட் ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் கழித்துவந்தார்.

Last Updated : Feb 19, 2021, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details