தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்துவிட்டதாகக் கூறி ஜார்க்கண்டில் முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்! - தொகுதி அலுவலகம்

ஜார்க்கண்ட் பொகாரோவில் அரசு கோப்புகளில் இறந்துவிட்டதாகக் கூறி முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இறந்துவிட்டதாகக் கூறி ஜார்க்கண்டில் முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்
இறந்துவிட்டதாகக் கூறி ஜார்க்கண்டில் முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

By

Published : May 28, 2023, 6:34 AM IST

ஜார்கண்ட்: பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெதன் கான்சி (70) என்ற முதியவர். இவர் தனது முதுமை காலத்தை இவரின் ஓய்வூதியத்தில் தன் அன்றாட வாழ்கையை நடத்தி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இவரின் கணக்கில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த கான்சி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று விவரம் கேட்டுள்ளார். தனக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதையும் அதன் காரணத்தை குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் மனுக் கொடுத்துள்ளார். முறையாக பதில் ஏதும் அளிக்காத அதிகாரிகள் கான்சியின் புகார் மனுவையும் அலைக்கழித்துள்ளனர்.

இதையும் படிங்க:உங்களிடம் இ-பைக் இல்லையா? - ஜூன் மாதம் முதல் சண்டிகரில் வருகிறது புதிய நடைமுறை!

விடாபிடியாக முதியவர் தன் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை கேட்டதற்கு, அலுவலக பதிவுகள் அனைத்திலும் அவர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ பதிவிடப்பட்டுள்ளதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் கான்சி, இதனை மாற்ற பல்வேறு முயற்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ச்சியாக 8 மாதங்களாக அலுவலக பதிவில் மாற்றி அமைத்து தனக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கக்கோரி அலுவலகத்திற்கு நாள்தோறும் சென்றுவருகிறார். இது குறித்து பேசிய கான்சி, "தான் இறந்து போகவில்லை என்றும், அதிகாரபூர்வ பதிவுகளில் அதனை மாற்றி தனக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதனால் நான் உணவிற்கு கூட வழியில்லாமல் தவிக்கிறேன். பொகாரோ மாவட்டத்தின் சமூக பாதுகாப்பு உதவி இயக்குனரிடம் மனுக் கொடுத்துள்ளேன் என்றார்.

கான்சியின் மனு குறித்து பாதுகாப்பு உதவி இயக்குநர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு... கிச்சடி சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details