தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் பெண் எம்எல்ஏ-வுக்கு 5 ஆண்டு சிறை! - 5 ஆண்டு சிறை தண்டனை

தனியார் தொழிற்சாலை கலவர வழக்கில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jharkhand: காங்கிரஸ் பெண் எம்எல்ஏ.வுக்கு 5 ஆண்டு சிறை..!
Jharkhand: காங்கிரஸ் பெண் எம்எல்ஏ.வுக்கு 5 ஆண்டு சிறை..!

By

Published : Dec 14, 2022, 8:09 AM IST

ஜார்க்கண்ட்: கடந்த 2015-ஆம் ஆண்டு ராம்கார்க் ராஜப்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் நடந்த போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ராம்கார்க் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எல்.எல்.ஏ மம்தா தேவி உள்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் எம்எல்ஏ மம்தா தேவி உள்பட 13 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதனால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள கூட்டணி அரசில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15-ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க:இப்போது யார் பப்பு.? எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி.. அனல் பறந்த விவாதம்..

ABOUT THE AUTHOR

...view details