கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பொது மருத்துவமனை சாலையில் நகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு நேற்று (ஜூலை 20) காலை சென்ற பெண் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா என கடை உரிமையாளரிடம் அறிமுகமாகியுள்ளார்.
மேலும், தான் மலேசியாவில் வேலை பார்ப்பதாகவும், 36 கிராம் எடையுள்ள இரண்டு நெக்லஸ்கள் வேண்டும் மாலை 5 மணிக்கு தனது கணவருடன் வந்து வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், இரவு 7.30 மணியளவில் கடை உரிமையாளர் வழக்கம்போல் நகைகளை எடுத்து வைத்தபோது 40 கிராம் எடையுள்ள இரண்டு நெக்லஸ்கள் காணாமல் போனது தெரியவந்தது.