ஐஐடி(IIT), என்ஐடி(NIT), ஐஐஐடி(IIIT) மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ தேர்வுகள் நடக்கும். மெயின், அட்வான்ஸ்டு என இரு தேர்வுகளை ஜேஇஇ உள்ளடக்கியது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வெழுதலாம்.
இந்தத் தேர்வு முதல்கட்டமாகப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்துவருவதால் ஜேஇஇ முதன்மை தேர்வுகள் ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரையிலும், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.