ஹைதராபாத்:தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவு அளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதர்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 95.8% பேர்கள் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.