பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர நடைபெறும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக மே மாதம் 24 முதல் 28 ஆம் தேதி வரை நடக்கவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஜே இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு ஏப்ரல், மே மாதங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.