தேசிய தேர்வு முகமை(NTA-National Testing Agency) ஐஐடி ஜேஇஇ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஐஐடி டெல்லி மாணவர் மிருதுல் அகர்வால் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். மொத்த மதிப்பெண் 360க்கு 348 மதிப்பெண்கள் இவர் எடுத்துள்ளார்.
தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதிய நிலையில், அதில் 41 ஆயிரத்து 862 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் ஆறாயிரத்து 452 பேர் பெண்கள்.