தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

81 வயது மூத்த எம்பி 'கிங் மகேந்திரா' காலமானார் - மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திர பிரசாத்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் 'கிங் மகேந்திரா' என்றழைக்கப்படும் மகேந்திர பிரசாத் இன்று (டிசம்பர் 27) டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 81.

மகேந்திர பிரசாத் காலமானார், Mahendra Prasad passes away
மகேந்திர பிரசாத் காலமானார்

By

Published : Dec 27, 2021, 1:25 PM IST

டெல்லி: பிகாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திர பிரசாத் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால், அவர் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார்.

மகேந்திரா பிரசாத் ஏழு முறை எம்பியாகப் பதவிவகித்துள்ளார். மேலும், நீண்ட நாள்களாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இவர், 1980ஆம் ஆண்டில் முதன்முறையாக பிகார் ஜெகனாபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1985 - 2021 வரை

அதற்கடுத்த 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியுற்றார். இதனால், 1985ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியால் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து இப்போதுவரை தொடர்ந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

எனவே, இவர் 'கிங் மகேந்திரா' என்றழைக்கப்படுகிறார். மேலும், இவர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மட்டுமில்லாமல் ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலிருந்தும் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மறைவிற்குப் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் துப்பாக்கிச்சூடு - 6 மாவோயிஸ்ட் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details