ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், மான்கோட் எல்லைப் பகுதியில் இன்று(நவ.9) ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில் குண்டு பாய்ந்து ராணுவ வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தவறுதலாக வெடித்த துப்பாக்கி.. எல்லையில் ராணுவ வீரர் பலி! - ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
army
இதையடுத்து, சக ராணுவ வீரர்கள் அவரை மீட்டு, ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு...?