பிஜப்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தீஸ்கர் ஆயுதப்படை முகாமில், நேற்றிரவு(அக்.5) திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. அப்போது சக ராணுவ வீரர்கள் சென்று பார்த்தபோது, வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது தெரியவந்தது.
சத்தீஸ்கர் ஆயுதப்படை வீரர் தற்கொலை! - போலீஸ் விசாரணை
சத்தீஸ்கர் ஆயுதப்படை முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
BIJAPUR
இதையடுத்து அவரை வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார். தற்கொலை செய்து கொண்ட வீரர் சுனில் என்பதும், அவர் மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. வீரரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!