டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க ஏதுவாக அம்மாநில முன்னாள் தலைமைச் செயலர் எம்.எம். குட்டி தலைமையில் ஒரு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது பணியை விரைவில் தொடங்கவுள்ளது என்றும், அண்டை மாநிலங்களுடன் இணைந்து வட இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மேலும், டெல்லி மற்றும் வட இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்றும், அதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப ரீதியான சாதனங்களையும் பயன்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.