தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிமெக்ஸ் கடல்சார் பயிற்சியின் 10 ஆண்டுகள் நிறைவு - இந்தியா ஜப்பான் கடல்சார் பயிற்சி

இந்தியா- ஜப்பான் கடல்சார் பயிற்சியான ஜிமெக்ஸ் 2022-யின் 6ஆவது பதிப்பு வங்கக்கடலில் நிறைவடைந்தது.

Etv Bharat ஜிமெக்ஸ் கடல்சார் பயிற்சியின் 10 ஆண்டுகள் நிறைவு
Etv Bharat ஜிமெக்ஸ் கடல்சார் பயிற்சியின் 10 ஆண்டுகள் நிறைவு

By

Published : Sep 13, 2022, 5:27 PM IST

விசாகப்பட்டினம்: இந்தியா-ஜப்பான் கடல்சார் பயிற்சியான ஜிமெக்ஸ் 2022-யின் 6ஆவது பயிற்சி செப்டம்பர் 11ஆம் தேதி வங்கக்கடலில் தொடங்கியது. இந்த பயிற்சியில் ஜப்பானின் எஸ்கார்ட் ப்ளோடில்லா ஃபோர்-ன் கமாண்டர் ரியர் அட்மிரல் ஹிராட்டா டோஷியுக்கி தலைமையில் ஜப்பான் பாதுகாப்பு போர்க்கப்பல்களும், இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய கொடி அதிகாரி கமாண்டிங் ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையில் இந்திய கடற்படை போர்க் கப்பல்களும் ஈடுபட்டன.

ஜப்பானின் கப்பல்களை வங்கக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் வரவேற்றன. இந்தியாவின் சார்பில் சகயாத்ரி, ரன்விஜய், ஜோதி ஆகிய உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல்கள் இடம் பெற்றன. கடலோர ரோந்துக் கப்பல் சுகன்யா, நீர்மூழ்கி கப்பல்கள், எம்ஐஜி 29 கே போர் விமானம், ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டன. ஜிமெக்ஸ் 22 கடலிலும், விசாகப்பட்டினம் துறைமுகத்திலும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளன. அடுத்தக்கட்ட பயிற்சிகள் தொடங்கியுள்ளன. 2012ஆம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் பயிற்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குஜராத் அரசு வேதாந்தா–ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்

ABOUT THE AUTHOR

...view details