மாதேபுரா:பிகார் மாநிலம், மாதேபுரா மாவட்டம் பத்ராஹா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 106-யில், நேற்று(ஏப்ரல் 27) இரவு ஒரு விழாவில் கலந்து கொண்டு மூன்று இளைஞர்கள் பைக்கில் திருப்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது எதிரில் வந்த கார் மோதியதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து பைக் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்தநிலையில் அவ்வழியாக எதேச்சையாக வந்த ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ், விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தார். விபத்து நடந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சித்தார்.