தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெறுப்பு கோஷம் - கைதாகிறார் பாஜக பிரமுகர்? - ஜன்தர் மந்தர்

ஜந்தர்மந்தரில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்பு கோஷம் எழுப்பிய குற்றச்சாட்டில் பாஜக பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் கைதுசெய்யப்படுவார் என டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

Ashwini Upadhyay
Ashwini Upadhyay

By

Published : Aug 10, 2021, 8:32 AM IST

டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று (ஆகஸ்ட் 9) பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதாகப் புகார் எழுந்தது. பாஜக பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்விதமாக கோஷம் எழுப்பிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து டெல்லி காவல் துறை, விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் தீபக் யாதவ் பேசுகையில், "ஜந்தர்மந்தரில் அனுமதி பெறாமல் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் முறையற்ற வகையில் வன்முறையைத் தூண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டது காவல் துறை கவனத்திற்கு வந்தது.

இது தொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள். அஸ்வினி உபாத்யாய் கோஷம் எழுப்பிய காணொலியை நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். காணொலி உண்மை என்னும்பட்சத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க:”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட்

ABOUT THE AUTHOR

...view details