அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. பாஜக 150 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. இருப்பினும், வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பின்னடைவை முதலில் பின்னடைவை சந்தித்தார். அதன்பின் மதியம் 12 மணி நிலவரப்படி முன்னிலை பெற்றுவருகிறார். இப்போது முதல் இடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சியும் 3ஆவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது.
மேலும், இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார். யாதவ், பாஜக வேட்பாளரான ரகுராஜ் சிங் ஷக்யாவை விட 35,574 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்துவருகிறார். அதேபோல, ராம்பூர் மற்றும் கட்டௌலி சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.