தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து - இதுவரை 9 பேர் சடலமாக மீட்பு! - ரம்பன் மாவட்டம்

ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்தில் இதுவரை ஒன்பது தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்.

jammu
jammu

By

Published : May 21, 2022, 6:26 PM IST

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில், ஜம்மு-ஶ்ரீநகர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை நேற்று முன்தினம் இரவு (மே 19) இடிந்து விழுந்தது. சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த கனமழை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் மூன்று தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். நேற்று ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுவரை ஒன்பது பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளை சுற்றிலும் குப்பைகள் இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது - அதனால் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எட்டு ஆண்டு கால பாஜக ஆட்சி மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details