தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு - Road Closed

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பாறைகள் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலை
ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலை

By

Published : Jan 7, 2023, 10:00 AM IST

ராம்பன்: ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் சாலை மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ராம்பன் மாவட்டம் மெகர் தேசியச் நெடுஞ்சாலையில் சிறு சிறு பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலை வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் பாறைகள் சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

பாறைகள் சரிவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், சாலையில் விழுந்து கிடக்கும் சிறு சிறு பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் ராம்பன் மாவட்ட எஸ்.பி. மோகித சர்மா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகர் - ஜம்மு இடையேயான பிரதான சாலையில் கற்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், நீண்ட தூரத்திற்கு லாரிகள், கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதையும் படிங்க:அத்துமீறி பொதுக் கூட்டம் - சந்திரபாபு நாயுடுவின் கார் பறிமுதல்;பேருந்தின் மீது ஏறி பிரசாரம்

ABOUT THE AUTHOR

...view details