தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2020, 5:45 PM IST

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் வக்ஃப் வாரியங்களை நிறுவும் மத்திய அரசு - அமைச்சர் அப்பாஸ் நக்வி

டெல்லி : ஜம்மு-காஷ்மீர், லே-கார்கில் ஆகிய இரண்டு பகுதிகளிலும் வக்ஃப் வாரியங்களை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்துள்ளார்.

Jammu and Kashmir, Leh-Kargil to get Waqf boards: Naqvi
ஜம்மு-காஷ்மீரில் வக்ஃப் வாரியங்களை நிறுவும் மத்திய அரசு - அமைச்சர் அப்பாஸ் நக்வி

மத்திய வக்ஃப் கவுன்சில் கூட்டம் இன்று (டிச.4) டெல்லியில் நடைபெற்றது. மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கில் ஆகிய இடங்களில் வக்ஃப் வாரியங்கள் நிறுவப்படவுள்ளன. வக்ஃப் வாரியங்களை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு, 370 ஆவது பிரிவு ஒழிக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னரே இது சாத்தியமானது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கில் ஆகிய பகுதிகளில் உள்ள வக்ஃப் சொத்துக்களை இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக முறையாகப் பயன்படுத்துவதை புதிதாக அமைக்கப்படவுள்ள வக்ஃப் வாரியங்கள் உறுதி செய்யும். வக்ஃப் சொத்துக்களை முறையாகப் பதிவு செய்வதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை நவீன தொழிற்நுட்ப வசதிகளைக் கைக்கொண்டு டிஜிட்டல்மயமாக்கி, ஜியோ-டேக்கிங் / ஜி.பி.எஸ் மேப்பிங்கும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நிறைவடையும்.

அந்த சொத்துக்கள் அனைத்தும் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். யூனியன் பிரதேசத்தின் உள்கட்டமைப்பை உறுதிசெய்ய ‘பிரதமர் ஜன் விகாஸ் காரிகிராம்’ (பி.எம்.ஜே.வி.கே) திட்டத்தின் கீழ் கட்டமைக்க மத்திய அரசு போதுமான நிதி உதவியை வழங்கும்.

பல மாநிலங்களில் வக்ஃப் சொத்துக்கள் சில மாஃபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதனைத் தடுத்து தீவிர கண்காணிப்பை வலுப்படுத்தவும், அத்தகைய மாஃபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணிப்பை வலுப்படுத்த மத்திய வக்ஃப் கவுன்சிலின் குழு அனைத்து மாநிலங்களுக்கும் செல்லவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வக்ஃப் வாரியங்களை நிறுவும் மத்திய அரசு - அமைச்சர் அப்பாஸ் நக்வி

நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அடர்த்தியாக வாழும் 90 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 308 மாவட்டங்கள், 870 தொகுதிகள், 331 நகரங்கள் மற்றும் நாட்டின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினருக்கான வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. சுமார் 6 லட்சத்து 64 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரிய சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நிரைவடைந்துள்ளன. 32 மாநில வக்ஃப் போர்டுகளுக்கும் காணொளி கலந்தாய்வுக் கூட்டத்திற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

இதையும் படிங்க :'இந்தியப் பொருளாதாரம் 7.5 விழுக்காடு சரியும்' - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details