தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த காஷ்மீர் துலிப் மலர்த்தோட்டம்... சுற்றுலா பயணிகளை மயக்கும் எழில்மிகு தோற்றம்! - துலிப் மலர் தோட்டம்

Indira Gandhi Memorial Tulip Garden: ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டமாக கருதப்படும் இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம், உலக சாதனை புத்தகத்தில் (World Book of Records) இடம் பெற்றுள்ளது.

Indira Gandhi Memorial Tulip Garden: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துலிப் மலர்த்தோட்டம்
Indira Gandhi Memorial Tulip Garden: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துலிப் மலர்த்தோட்டம்

By

Published : Aug 20, 2023, 11:07 AM IST

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம் உலகப்புகழ் பெற்ற ஒன்று. ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டமாக கருதப்படும் இந்த தோட்டம், பல வண்ணங்கள் நிறைந்த துலிப் மலர்களுடன் பரந்து விரிந்த பரப்பளவில் காணப்படும்.

ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், உலக சாதனை புத்தகத்தில் (லண்டன்) இடம் பிடித்து உள்ளது. 68 வகையில் தனித்துவமாக பூத்துக் குலுங்கும், ஏறத்தாழ 15 லட்சம் துலிப் மலர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது. துலிப் பூங்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான மரியாதை விழா துலிப் தோட்டத்தில் நடைபெற்றது.

அதில் மலர் வளர்ப்பு, தோட்டங்கள் மற்றும் பூங்காக்களின் ஆணைய செயலாளர் ஷேக் ஃபயாஸ் அகமது, உலக சாதனை புத்தகத்தின் (World Book of Records, London) தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சந்தோஷ் சுக்லா ஆகியோரால் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார். அந்த நிகழ்ச்சியில், உலக சாதனை புத்தகத்தின் (லண்டன்) ஆசிரியர் திலீப் என் பண்டிட், காஷ்மீர் மலர் வளர்ப்பு இயக்குனர், இதர அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலை பணியாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது அந்த நிகழ்வில் பேசிய ஆணைய செயலாளர் ஷேக் ஃபயாஸ் அகமது, "இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தின் பெருமையை அங்கீகரித்த உலக சாதனை புத்தக (லண்டன்) குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் அவர், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை தான் ஒரு சாதனையாக கருதுவதாகவும், இந்த வெற்றி காஷ்மீரின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பதாகவும் கூறினார்.

இது ஸ்ரீநகரின் மலருக்கான வெற்றி மட்டும் அல்ல. இந்த வெற்றி இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள பிணைப்பின் சான்று எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து, உலக சாதனை புத்தகத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தோஷ் சுக்லா, இந்த சாதனைக்காக அமைப்பின் மத்திய செயற்குழுவிற்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

மேலும் அவர், இந்த அங்கீகாரம் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தின் அழகு மற்றும் மகத்துவத்தை கூறும் சான்றாக உள்ளது என்றும் இந்த தோட்டம் இயற்கையின் சிறப்பு மற்றும் மனித புத்திசாலித் தனம் ஆகிய இரண்டின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.

இந்த இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம், துலிப் மலர்களுக்கு மட்டுமல்லாமல், எண்ணற்ற மலர் வகைகளுக்கு புகலிடமாக செயல்படுகிறது. மென்மையான டாஃபோடில்ஸ், நறுமணமுள்ள பதுமராகம், பளபளப்பான ரோஜாக்கள், வசீகரமிக்க ரனுன்குலி, மஸ்காரியா மற்றும் மயக்கும் ஐரிஸ் பூக்கள் என பல வகை பூக்களின் புகலிடமாக உள்ளது.

இதையும் படிங்க:யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்.. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details