தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு & காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Three terrorists killed in encounter in J-K's Anantnag
Three terrorists killed in encounter in J-K's Anantnag

By

Published : May 6, 2022, 5:15 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பஹல்காம் போலீசார் தரப்பில், இந்த துப்பாக்கிச்சூட்டில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அஷ்ரப் மௌல்வி, ரோஷன் ஜமீர், ரபீக் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், மௌல்வி A++ பயங்கரவாதி. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளில் மௌல்வி முக்கிய பங்குவகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஜம்மு காஷ்மீர் காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details