ஸ்ரீநகர்:2014ஆம் ஆண்டு ஸ்ரீநகர் பகுதியில் 20 வயது சட்டக் கல்லுாாி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இழப்பீட்டுத் சட்டத்தின் படி அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க சட்ட சேவை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் நவ்ஷேரா பகுதியில் 20 வயது சட்டக்கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடைபெற்றது. மாணவி மீதான ஆசிட் தாக்குல் தொடர்பாக காஷ்மீர் ஐஜிபி ஏ.ஜி.மிர் மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அதில், ஸ்ரீநகர் எஸ்.எஸ்.பி அமித் குமார் மற்றும் எஸ்பி ரயீஸ் முகமது பட் (தற்போது தெற்கு காஷ்மீர் டிஐஜி) குற்றவாளிகளை அன்று இரவே கைது செய்தனர். குற்றச் சம்பவத்தில் ஈடுப்பட்ட இர்ஷாத் அமீன் வானி மற்றும் உமர் நூர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பீன் படி, ஆர்.பி.சி 120-பி பிரிவின் கீழ் (சதி செயலில் ஈடுபட்டது) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் மேலும் ஆர்.பி.சி. 326 ஏ பிரிவின் கீழ் (கடுமையான காயம் எற்படுத்தியது) ஆயுள் தண்டைனை மற்றும் ரூபாய் 5 லட்சம் அபதாரம் விதிக்கப்படுகிறது. இந்த ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் ஆர்.பி.சி. 201 பிரிவின் கீழ் (ஆதாரங்களை அழித்தது) 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.