சண்டிகர்: கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. ஆளும் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி மூன்றாவது இடத்திலும், பாஜக நான்காவது இடத்திலும் உள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும், அகாலி தளம் 13 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனிடையே பாஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் வீட்டில் அவரது தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றனர்.