ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைக்கவுள்ளார். அங்கு தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இதன் காரணமாக பிராந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள தாக்கம், இந்திய அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்கவுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகானர்ஜுன கார்கே உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தியா இதுவரை 600க்கும் மேற்பட்டவர்களை ஆப்கனிலிருந்து மீட்டுள்ளது. இதில் 228 இந்திய குடிமக்களும் அடக்கம். அத்துடன் ஆப்கன் சீக்கியர்கள் 77 பேரை இந்தியா மீட்டுள்ளது.